அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கான அமெரிக்க துாதரை அறிவித்துள்ளார். இப்பதவியில், அமெரிக்க வெளியுறவு துறை மூத்த ஆலோசகரானபுனித்தல்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொலம்பியா பல்கலையில் சர்வதேச விவகார துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள புனித் தல்வார், வாஷிங்டனில் வசித்து வருகிறார்.
வெளியுறவு துறையில் அரசியல் மற்றும் ராணுவ விவகாரங்கள் பிரிவு இணையமைச்சராக பணியாற்றியவர். பார்லி., பிரதிநிதிகள் சபையிலும், வெளியுறவு கொள்கை உருவாக்க குழுவிலும் முக்கிய பங்காற்றியவர்.
கடந்த வாரம், காஷ்மீரை சேர்ந்த இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகால், அமெரிக்காவிற்கான நெதர்லாந்து துாதராக நியமிக்கப்பட்டார். ஒரே வாரத்தில் இரு நாடுகளின் துாதர்களாக இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.