ஹமில்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு பிரதான வீதி மற்றும் கிழக்கு கிங் வீதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வாகன விபத்தில் மூன்று பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
களவாடப்பட்ட வாகனமொன்றை நபர் ஒருவர் வேகமாக செலுத்திய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாதசாரிகள் மீது மோதுண்ட வாகனம், கொங்க்ரீட் தூண் ஒன்றின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தூணில் மோதுண்ட வாகனம் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதசாரிகள் மற்றும் வாகனத்தை செலுத்திய நபர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.