Home இந்தியா இந்தியாவில் நான்காவது அலை உடனடியாக….

இந்தியாவில் நான்காவது அலை உடனடியாக….

by Jey

இந்தியாவில் நான்காவது அலை உடனடியாக வர வாய்ப்பில்லை. இஸ்ரேல் நாட்டில் உருவாகி உள்ள புதிய வைரஸ், ‘கவலைக்குரிய வைரஸ்’ வகையாக அறிவிக்கப்படவில்லை. எனவே, கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனினும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம்.

நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. இதனால், இந்தியாவில் வைரஸ் பரவினாலும், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

நாட்டில், கொரோனா வைரசின் நான்காவது அலை கண்டிப்பாக இருக்கும். எனினும், அது உடனடியாக ஏற்படாது’ என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், தென் கொரியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், வைரசால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இது, நம் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.இந்நிலையில், நம் நாட்டில் நான்காவது அலை கண்டிப்பாக இருக்கும் என்றும்; அது உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

related posts