இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோருக்கு முக்கிய அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது.
அதன்படி இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செலாவணி வீதமானது வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விடவும் தற்போது அதிகரித்துள்ளது.
இதற்கமைய, நடைமுறை செலாவணி வீதம், வெளிநாட்டு வேலையாட்களின் வெளிநாட்டுச் செலாவணி பணவனுப்பல்களின் மீதும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய் மீதான உயர்ந்த ரூபா பெறுமதியின் மீதும் உயர் வருமானத்தினை வழங்குகிறது.
அத்துடன் இந்த மாதம் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற அந்நிய செலாவணியும் அதிகரித்துள்ளது.
எனவே இனி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.