Home இலங்கை இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில்…

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில்…

by Jey

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது.

இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது.

அந்நாட்டில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது.

இதனால், அந்நாட்டு மக்கள் மூன்று வேலை உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கடும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் மக்கள் காத்துகிடக்கின்றனர்.

இந்நிலையில், எரிபொருள் வாங்க வரிசையில் காத்து நின்றுகொண்டிருந்த 2 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கொழும்புவிற்கு வெளிப்புற நகரில் நேற்று பெட்ரோல் வாங்குவதற்காக பெட்ரோல் நிலையம் முன் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் திடீரென அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

அதேபோல், கண்டி நகரில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணை வாங்குவதற்காக வெயிலில் காத்திருந்த முதியவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். எரிபொருள் வாங்க வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள் பலரும் மயங்கி விழுந்த சம்பங்களும் அரங்கேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

related posts