Home உலகம் வடகொரியா நேற்று பீரங்கி குண்டுகளை வீசி சோதனை

வடகொரியா நேற்று பீரங்கி குண்டுகளை வீசி சோதனை

by Jey

வடகொரியா நேற்று பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து அடுத்தடுத்து வீசப்பட்ட 4 பீரங்கி குண்டுகள் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை திரும்பப்பெற அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாகவும் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 10 முறை ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதில் கடைசியாக நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணையை முழுமையாக சோதிக்க தயாராகி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வரும் நிலையில், வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

related posts