Home இலங்கை இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்வு

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்வு

by Jey

இலங்கையில் முட்டை மற்றும் கோழிக்கறியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

 

தற்போது ஒரு முட்டையின் விலை 32 முதல் 36 ரூபாய் வரையிலும், கோழிக்கறி கிலோ 850 முதல் 1000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள், குறிப்பிட்டுள்ளனர்.

related posts