லண்டன் பல்கலையில் படித்த இந்திய வம்சாவளி மாணவி கொலை செய்யப்பட்டார். துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர் இது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சபிதா தன்வானி, 19, லண்டன் பல்கலையில் படித்தார். அங்குள்ள ஆர்பர் ஹவுஸ் மாணவியர் விடுதியில் தங்கியிருந்தார்.
கடந்த 19ம் திகதி, கழுத்தில் பலத்த காயங்களுடன், அவர் அறையில் இறந்து கிடந்தார். விசாரணை நடத்திய ‘ஸ்காட்லாண்ட் யார்டு’ போலீசார், வட ஆப்ரிக்க நாடான துனிசியாவை சேர்ந்த மஹெர் மாரூப், 22, என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:சபிதாவும் மஹெரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.ஆனால், மஹெர் மாணவர் அல்ல.
சபிதா கொலையாவதற்கு முதல் நாள், மஹெர் அவரது அறையில் தங்கியிருந்தார் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீவிர விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.