Home உலகம் ஐ.நா.,வின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்திய பொருளாதார வல்லுனர் நியமனம்

ஐ.நா.,வின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்திய பொருளாதார வல்லுனர் நியமனம்

by Jey

இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் ஐ.நா.,வின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச பிரச்னைகளில், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், வரும் தலைமுறையினரின் நலன் சார்ந்து எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ‘பொது செயல் திட்டம்’ என்ற அறிக்கையை ஐ.நா., உயர்மட்டக் குழு உருவாக்கியுள்ளது.

இதன் அடிப்படையிலான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த, சுவீடன் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் உள்ளிட்டோர் தலைமையில், 12 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் அமைத்துள்ளார்.

இக்குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுஉள்ளார். இவர், ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் பொருளாதார கல்வி மற்றும் திட்டப் பிரிவின் தலைவராக பணியாற்றியவர்.

தற்போது மாசாசூசெட்ஸ் அம்ஹெர்ஸ் பல்கலை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

 

related posts