Home கனடா 2025ம் ஆண்டு வரையில் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கப்படும் – என்.டி.பி.

2025ம் ஆண்டு வரையில் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கப்படும் – என்.டி.பி.

by Jey

எதிர்வரும் 2025ம் ஆண்டு வரையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என என்.டி.பி. கட்சி உறுதியளித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானங்கள், வரவு செலவுத் திட்டம் போன்ற சந்தர்ப்பங்களில் என்.டி.பி கட்சி லிபரல் அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளது.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தவறியிருந்தது.

இரண்டு கட்சிகளும் சில விடயங்கள் தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் செயற்பட உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

related posts