Home கனடா கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு காத்திருக்க வேண்டிய நிலை

கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு காத்திருக்க வேண்டிய நிலை

by Jey

கடனாவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனேடியர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாது நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூடுதல் எண்ணிக்கையில் கனேடியர்கள் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்துள்ள காரணத்தினால் இவ்வாறு, கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருக்க நேரிட்டுள்ளது.

நேரில் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் ஐந்து அலுவலக நாட்களிலும், அஞ்சல் வழியாக விண்ணப்பம் செய்தால் 17 அலுவலக நாட்களிலும் கடவுச்சீட்டு வழங்கப்படும்.

மக்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை ஆரம்பித்துள்ள நிலையில் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுக்கள் குவிவவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1.2 மில்லியன் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021ம் ஆண்டு மார்ச் வரையில் 363000 கடவுச்சீட்டுக்களே வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

related posts