ரஸ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் காரணமாக கனடா எரிபொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
எண்ணெய் மற்றும் வரிவாயு என்பனவற்றின் நாளாந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாளாந்தம் 300,000 பீப்பாய்களாக அதிகரிக்க உற்பத்தியாளர்களுக்கு அனுமதிப்பதாக எரிபொருள் வள அமைச்சர் ஜொனதன் வில்கின்சன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சக்தி வள முகவர் நிறுவனத்தின் கூட்டம் பாரிஸில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேய்ன் ரஸ்ய யுத்தம் காரணமாக கனடாவின் ஐரோப்பிய நட்பு நாடுகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் எரிபொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.