வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரதிநிதிகள்
தெரிவித்தனர். வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க பிரிட்டன் சம்மதம் தெரிவித்துள்ளது.
அல்பேனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த விஷயத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து ஓர் அணியில் உள்ளன.
ரஷிய துணை தூதர் அன்னா எவ்ஸ்டிக்னீவா கூறுகையில், “புதிய கூடுதல் தடைகள் வட கொரிய குடிமக்களை ஏற்றுக்கொள்ள முடியாத சமூக பொருளாதார மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளால் அச்சுறுத்தும்” என்று கூறினார்.
சீன தூதர் கூறுகையில், “நிலைமையை உறுதிப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கவும், உரையாடலை மீண்டும் தொடங்கவும் அமெரிக்கா கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.
பல கவுன்சில் உறுப்பினர்கள் வட கொரியாவிடம் ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில், இந்த நேரத்தில் பல தாக்குதல்களை உலகம் தாங்கிக் கொள்ள முடியாது, என்று கானா தூதர் ஹரோல்ட் அட்லாய் அக்யெமன் கூறினார்.