Home உலகம் நாசா விண்வெளி 355 நாட்கள் தங்கியிருந்து பணி செய்த வீரர்

நாசா விண்வெளி 355 நாட்கள் தங்கியிருந்து பணி செய்த வீரர்

by Jey

நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய். இவர் கடந்த ஏப்ரல் 9, 2021 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார்.

இவர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (355 நாட்கள்) தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.

இந்த நிலையில், இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது பணியை முடித்துவிட்டு வருகிற 30 ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளார். அவர் பூமிக்கு திரும்புவதை நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும் அவருடன் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ்) பூமிக்கு திரும்ப உள்ளனர்.

மூவரும் பூமிக்கு திரும்பிய உடன் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ள உள்ளனர்.

 

 

related posts