Home உலகம் சீனாவில் எதிர்காலத்தில் உள்நாட்டு அமைதியின்மை ஏற்படும்

சீனாவில் எதிர்காலத்தில் உள்நாட்டு அமைதியின்மை ஏற்படும்

by Jey

சீனாவில் நடைமுறையில் உள்ள ‘ஒரு குழந்தை கொள்கையால்’ அரசுக்கு ஏற்படுள்ள நிதி அழுத்தங்களைச் சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் காலத்தை உயர்த்துகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 1ம் திகதி முதல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வயது முதிர்ந்த சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய நிதியின் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக, பணியிலிருந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு தாமதமான ஓய்வூதியக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கியது.

கடந்த டிசம்பர் 30ம் திகதியன்று எடுக்கப்பட்ட, தேசிய முதியோர் மேம்பாடு மற்றும் முதியோர் பராமரிப்பு சேவை அமைப்புக்கான 14வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

“அதற்கு ஒரே காரணம் இப்போது பணம் இல்லை என்பதுதான்” என்கிறார் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சீனாவை பற்றிய விஷயங்களை நன்கு அறிந்த நிபுணருமான பெங் சோங்கி.

இந்த கொள்கை 2013 முதல் நீண்ட காலமாக செயல்பாட்டில் இருந்தது, ஆனால் தொழிலாளர்களிடையே கடுமையான அதிருப்தி காரணமாக அது தாமதமானது,

“ஒரு குழந்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற குடும்பக் கட்டுப்பாடு சட்டம் சீனாவில், இயற்கை மக்கள்தொகைச் சட்டத்தை அழித்துவிட்டது, இது சீனாவில் ஆண் மற்றும் பெண் மக்கள்தொகையின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் விநியோகத்தையும் பெரிதும் பாதித்தது” என்று அவர் கூறினார்.

“இந்த புதிய நடவடிக்கை, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் மற்றும் முதுமை தொடர்பான சமூக நலச் செலவுகள், மத்திய அரசின் நிதிச் செலவினங்களில் பெரும் சுமையாக மாறியிருப்பதை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது. எனவே இதை குறைக்கவும், அரசின் மீதான ஊதிய அழுத்தத்தை தவிர்க்கவும் ஓய்வு பெறுவதை அரசு தாமதப்படுத்துகிறது” என்று தைவான் நாட்டை சேர்ந்த பொருளாதார நிபுணர் வு ஜியாலாங் கூறினார்.

சீனாவில் நிதி அழுத்தங்கள் காரணமாக எதிர்காலத்தில் உள்நாட்டு அமைதியின்மை ஏற்படும் என்ற எச்சரிக்கையாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

related posts