Home உலகம் ரஷ்ய அதிபர் புடின் ஓர் இறைச்சி வியாபாரியா?

ரஷ்ய அதிபர் புடின் ஓர் இறைச்சி வியாபாரியா?

by Jey

போலந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மக்களிடம் உரையாற்றுகையில்: உக்ரைனில் ரஷ்யா வெற்றி பெற முடியாது. உக்ரைனில் ஒரு அங்குல இடத்தைகூட விட்டு மக்கள் தர மாட்டார்கள்.

அங்கு நடப்பது சுதந்திரத்திற்கான போராட்டம். உக்ரைனில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலுக்கு பின்னர் நேட்டோ நாடுகளின் உறவுகள் மற்றும் நெருக்கம் அதிகரிக்கிறது. உக்ரைனில் புடின் தவறு செய்துள்ளார்.

போலந்து நாட்டின் வார்சா நகரில் நடக்கும் ஜனநாயக நாடுகள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிவரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அவர் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம். உலக நாடுகள் அமைதியை பின்பற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போர் காரணமாக உலக அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும். மக்களை கொன்று புடின் இறைச்சி வியாபாரியாக மாறியுள்ளார். அவர் இன்னும் அதிகாரத்தில் நீடிக்க முடியாது. உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்க வேண்டும்.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து அகதிகளாக போலாந்து வந்து சேர்ந்த குடிமக்களை தான் சந்தித்ததாகவும் அவர்களது அவலநிலையை காணும்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஓர் இறைச்சி வியாபாரி போல நடந்து கொள்கிறார் . இவ்வாறு பைடன் பேசினார்

 

related posts