Home உலகம் சீனாவில் முழு ஊரடங்கு

சீனாவில் முழு ஊரடங்கு

by Jey

கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து சீனாவில் , ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், சில நகரங்களில் தீவிர ஊரடங்குகளையும் சீனா அமல்படுத்தி வருகிறது.

ஷாங்காய் நகரில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில நகரங்களிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளன.

ஊரடங்கு உள்ள பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

related posts