அமெரிக்ககாவை தகர்க்கும் திறனுடைய இந்த ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
சமீபத்தில், அதிபர் கிம்மின் மேற்பார்வையில், அந்நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான, ‘வாசோங் – 17’ பரிசோதிக்கப்பட்டது.
கடந்த வாரம், வாசோங் – 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்கும்.
அணு ஆயுதப் போர் மூண்டாலும், அதை தடுக்கும் வகையில், வட கொரியாவின் திறன் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.