கனடாவின் சில பகுதிகளில் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் இவ்வாறு எரிபொருள் விலை குறைக்கப்பட உள்ளது.
குறித்த மாகாணங்களில் குறிப்பாக எரிவாயு விலையில் இன்று வீழ்ச்சியை பதிவு செய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினம் எரிவாயுவின் விலைகள் 9 சதத்தினால் வீழ்ச்சி அடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேற்கு பகுதி நகரங்களில் எரிவாயு விலைகளில் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.