Home இந்தியா காணொலி வாயிலாக விசாரணை….

காணொலி வாயிலாக விசாரணை….

by Jey

இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதும் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும், கடந்த 2 ஆண்டுகளாக காணொலி காட்சி வாயிலாகவே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே நேரடி விசாரணை நடத்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்.,4ம் திகதி முதல் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 4ம் திகதி முதல் உச்சநீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை நடத்தப்படும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

related posts