Home உலகம் அமெரிக்கா ஏன், வெறும் தடைகள் என்ற அளவோடு நின்றுவிடுகிறது?

அமெரிக்கா ஏன், வெறும் தடைகள் என்ற அளவோடு நின்றுவிடுகிறது?

by Jey

ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து,. இதில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? இது தொடர்பாக, சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் துாதர் ஜூடித் ரேவின் நமது நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி:

கடந்த இருபது ஆண்டுகளில், செசன்யா, ஜார்ஜியா, கிரிமியா போன்ற ரஷ்ய எல்லையோரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் வேறுசில பகுதிகளிலும், ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவற்றைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யா மீது நீண்டகால பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இத்தகைய தடைகளோ, புதிய தடைகள் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையோ, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தவில்லை. இத்தகைய தடைகள் போதுமானவையாக இல்லையா? புதிய தடைகள் எந்த வகையில் வித்தியாசமானவை? ரஷ்யாவைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஏன், வெறும் தடைகள் என்ற அளவோடு நின்றுவிடுகிறது?

பல வகைகளில் இந்தத் தடைகள் வித்தியாசமானவை. இவை முன்னெப்போதும் இல்லாதவை. ரஷ்யா மீது செய்தது போன்று வேறு எந்த நாட்டின் மீதும், எந்தச் சூழ்நிலையிலும், இதுபோன்ற கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய விரைவான, ஒருங்கிணைந்த தடைகள் விதிக்கப்பட்டதில்லை.

உக்ரைன் படையெடுப்புக்கு முன்பு இருந்ததை விட, தற்போது ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வீழ்ச்சியைத் தவிர்ப்பதற்காக பிப்ரவரி 25 முதல், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மாஸ்கோ பங்குச் சந்தை மூடப்பட்டது.

ரஷ்ய மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தை இரண்டு மடங்காக 20 சதவீத அளவுக்கு உயர்த்தியிருப்பதோடு அல்லாமல், முதலீட்டுக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

கிட்டத்தட்ட 400 தனியார் பன்னாட்டு நிறுவனங்கள், ரஷ்யாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறிவிட்டன. ஒருசில வாரங்களுக்குள்ளேயே, 30 ஆண்டுக்கால பொருளாதார வளர்ச்சி சரிந்துபோய்விட்டது.

ரஷ்யாவின் முன்னணி நிதி நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளினால், அவற்றின் தொழில் ஆற்றல் மிகமோசமாக நசிந்துவிட்டன.

 

related posts