கனேடிய சமஷ்டி அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 7ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை மையமாகக்கொண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
58.4 பில்லியன் துண்டு விழும் தொகையை எதிர்பார்ப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.