கைதிகளுக்கு ஏராளமான வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் பல மாநிலங்களில் சிறை விதிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி சிறைத்துறை நிர்வாகம், கடந்த 1969ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விதிகளையே பின்பற்றி வந்தது.
புதுச்சேரி சிறை சட்ட விதிகள், 53 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, போலீசாருக்கு இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம், சிறை விதிகளை மாற்றுவதற்கான வரைமுறையை வகுத்து, அந்தந்த மாநிலங்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
அதையொட்டி, புதுச்சேரி சிறைத்துறை நிர்வாகம் சட்ட விதிகளை திருத்தம் செய்து, சட்டத்துறை மற்றும் அமைச்சரவை ஒப்புதல் பெற்று பரிந்துரைக்கப்பட்ட கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினார்.
தொடர்ந்து, புதுச்சேரி சிறைத்துறை சட்ட விதிகள் திருத்தம் தொடர்பான அரசாணை, கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது.சட்ட புத்தகம் வெளியீடு’புதுச்சேரி சிறை சட்ட விதிகள்-2021′ புத்தகத்தை சிறை ஐ.ஜி., ரவிதீப் சிங் சாகர் நேற்று தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அதனை, சிறை தலைமை கண்காணிப்பாளர் அசோகன் பெற்றுக் கொண்டார்.