Home கனடா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதனால் ஆறாம் அலை ஏற்பட்டது

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதனால் ஆறாம் அலை ஏற்பட்டது

by Jey

சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாகவே கோவிட் ஆறாம் அலை ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ மாகாணத்தின் கோவிட் விஞ்ஞான ஆலோசனை சபையின் தலைவர் டொக்டர் பீட்டர் யுனி தெரிவித்துள்ளார்.

மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமிக்ரோனின் துணை திரிபினால் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக சுகாதார கட்டுப்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளினால் இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் நாம் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் செயற்பட்டதனாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts