புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் பூர்வகுடியின மக்களிடம் முதல் தடவையாக மன்னிப்பு கோரியுள்ளார்.
வதிவிடப் பாடசாலைகளில் கடந்த காலங்களில் கத்தோலிக்க தேவாலயங்களினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இத்தாலிய மொழியில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
அண்மைய நாட்களாக வத்திக்கானில் பாப்பாண்டவர், பூர்வகுடியின சமூக மக்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முழு இதயபூர்வமாக அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாக பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.
கனேடிய பேராயர்களான தமது சகோதரர்களுடன் இணைந்து மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
வதிவிடப் பாடசாலைகளில் பூர்வகுடியின சமூக சிறார்கள் எதிர்நோக்கிய அநீதிகளுக்கு பாப்பாண்டவர் பகிரங்க மன்னிப்பு கோருவார் என பூர்வகுடியின பிரதிநிதிகள் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.