கனடாவில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.
கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்த காலப் பகுதியில் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 28 வீதமாக உயர்வடைந்துள்ளது.
அண்மைய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளது.