Home இந்தியா ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி தேர்தலில் நிதிஷ் குமார்

ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி தேர்தலில் நிதிஷ் குமார்

by Jey

பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார்,  எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார்.பின், பல ஆண்டுகள் லோக்சபா எம்.பி.,யாக இருந்த நிதிஷ், மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

அவர், பீஹார் முதல்வராக, பதவியேற்றது முதல், எம்.எல்.சி.,யாக இருந்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய நிதிஷ், ‘நான் ராஜ்யசபா எம்.பி.,யாக மட்டும், இருந்ததே இல்லை’ என்றார்.

பீஹார் முதல்வராக நிதிஷ் குமார் தொடர்ந்து நீடிப்பார். அவர், ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என, ஐக்கிய ஜனதாதளம் கட்சி தெரிவித்துள்ளது.

 

இதையடுத்து, விரைவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி தேர்தலில், நிதிஷ் குமாரை வேட்பாளராக நிறுத்த, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி திட்டமிட்டுள்ளதாக, பீஹாரில் தகவல் பரவியது.இதை, ஐக்கிய ஜனதாதளம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது பற்றி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உபேந்திரா குஷ்வாஹா, சஞ்சய் குமார் ஜா ஆகியோர் கூறியதாவது:பீஹாரில், நடந்த சட்டசபை தேர்த லின் போது, தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, நிதிஷ் குமார் தான் முன்னிறுத்தப் பட்டார்.

அவர், பீஹார் முதல்வராக பணியாற்றவே, மக்கள் ஓட்டளித்தனர். அதனால், அவர் எங்கும் செல்ல மாட்டார்; முதல்வர் பதவியிலேயே தொடர்ந்து நீடிப்பார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில், அவர் போட்டியிடுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

related posts