அட்லான்டிக் கனடாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் மற்றுமொரு கோவிட் அலை பற்றிய எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அட்லான்டிக் வலயத்தில் ஏனைய எந்தவொரு பிராந்தியத்தை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தளவான கட்டுப்பாடுகள் காணப்படுவதனால் இவ்வாறு அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.