Home உலகம் மக்களிடம் உதவி கோரும் பாக் பிரதமர்

மக்களிடம் உதவி கோரும் பாக் பிரதமர்

by Jey

தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில், சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துமாறு, நாட்டு மக்களிடம் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் — இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் கடந்த 28-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

இந்நிலையில், ஒரு தனியார் ‘டிவி’ வாயிலாக மக்கள் மத்தியில் உரையாற்றிய இம்ரான் கான் கூறியதாவது:எனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, எப்படி எதிர்கொள்வது என்பதை திட்டமிட்டு வருகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதே நிலைமை, வேறு நாடுகளில் ஏற்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி இருப்பர். அதேபோல், பாக்., மக்களும் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.நாட்டு மக்களை போராட்டம் நடத்தக்கோரி இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளதால், பாக்.,கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

related posts