மக்களுடன் சேர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் ராம நாமத்தை ஜபிக்க வேண்டும். இதேபோல் ஹனுமன் ஜெயந்தியன்றும் ராமாயணத்தில் ஹனுமனின் பிரதாபங்களை தெரிவிக்கும் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
மக்களுடன் சேர்ந்து ஹனுமன் சாலிசா துதியை பாடி, கூட்டு வழிபாடு நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார்.
ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி விழாக்களை மாநிலம் முழுதும் கொண்டாடும்படி, கட்சியினருக்கு ம.பி., காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு, ௨௦௧௮ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ., இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பா.ஜ.,வை விட சில இடங்கள் கூடுதலாக வென்றிருந்த காங்கிரஸ், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. எனினும், ௨௦௨௦ம் ஆண்டு மார்ச்சில், காங்கிரசை சேர்ந்த ௧௫க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால் காங்., ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தது. தொடர் தோல்விகாங்கிரஸ் ௨௦௧௪ முதல், தேர்தல்களில் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்தது.அடுத்து நடக்க உள்ள சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவிலாவது வெற்றி பெற்றால் தான், ௨௦௨௪ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என காங்கிரஸ் கருதுகிறது.
பா.ஜ., பெற்று வரும் தொடர் வெற்றிகளுக்கு, அதன் ஹிந்துத்வா கொள்கையும் ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து, ஹிந்துத்வா கொள்கைகள் மீதான எதிர்ப்பை கைவிட்டு, அதன் மீது காங்கிரஸ் கரிசனம் காட்டத் துவங்கியுள்ளது.நாடு முழுதும் ராம நவமி விழா வரும் ௧௦ல் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ௧௬ம் தேதி ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராம நவமி விழாவையும், ஹனுமன் ஜெயந்தி விழாவையும் காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுதும் கொண்டாட வேண்டும். ராம நவமி விழாக்களில், பொது இடங்களில் மக்களை கூட்டி ராமாயணத்தை பாராயணம் செய்ய வேண்டும்; ராமாயண நாடகங்களை நடத்த வேண்டும்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே, ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி விழாக்களை கொண்டாட, காங்கிரஸ் தொண்டர்களுக்கு கமல்நாத் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.ஆதரவு நிலைப்பாடுஹிந்துத்வாவை ஆதரிக்காவிட்டாலும், எதிர்ப்பு தெரிவிக்காமல் நடந்து கொள்வதால் தான், டில்லியிலும், பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாகவும், அரசியல் வல்லுனர்கள் சிலர் கூறுகின்றனர்.
இதையடுத்தே, ஹிந்துத்வா ஆதரவு நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்து உள்ளதாக தெரிகிறது.பாசாங்கு வேண்டாம்பா.ஜ., ஆவேசம்மத்திய பிரதேச மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது:ராமரை கற்பனை கதாபாத்திரம், ராமாயணத்தை கற்பனை காவியம் என நீதிமன்றத்திலேயே தெரிவித்த கட்சி காங்கிரஸ்.
இப்போது ராமாயணத்தை படிக்கச் சொல்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை, யாரும் மறந்திருக்க முடியாது. ‘காவி பயங்கரவாதம்’ என கூறி ஹிந்துக் களை, பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசினார்; அதை, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.