ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியின் பின்னர் அதிக எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக வைத்தியசாலை அனுமதிங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிகள் என்பனவற்றின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகி வருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
168 தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிகள் உள்ளிட்ட 857 பேர் தற்பொழுது வைத்தியசாலைகளில் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரத்தை விடவும் இந்த வாரம் வைத்தியசாலை அனுமதி மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதி என்பன அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.