சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறையின் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பணிகளுக்கு, ‘டெண்டர்’ வழங்குவதில் மோசடி செய்ததாக, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 10 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடந்த நவ.,ல் உத்தரவிட்டிருந்தது
.இதை எதிர்த்து வேலுமணி தொடர்ந்த வழக்கை, தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின் போது, ‘வேலுமணி மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை, வரும், 19ம்திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.