Home இலங்கை உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

by Jey

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் தொடர்பில் உடனடியாக நாம் ஆராய வேண்டி உள்ளதாகவும், இல்லையேல் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது, நாட்டில் இன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனைத் தீர்ப்பதற்கு எல்லோரும் கட்சி பேதமின்றி செயற்படவேண்டியது அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாம் தோற்றுவிடுவோம் என்றால் அது நாடாளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

“நமது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தில் இன்று இந்த விவாதம் நடத்தப்படுகிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன், இது மேலும் அதிகரிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்ததால், நான் இதை ஒரு நெருக்கடியின் ஆரம்பம் என்று குறிப்பிடுகிறேன்.

தற்போதைய எரிபொருள், எரிவாயு, மின்சாரத் தட்டுப்பாட்டைக் காட்டிலும் எதிர்காலத்தில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நாம் அனைவரும் வேலை செய்யும் விதத்தில் அது நடக்கும் அல்லது ஓரளவு கட்டுப்படுத்தப் போகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

related posts