ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் உள்ள குடா கிராமத்தில் நடைபெற்ற ஒரு கோவில் விழாவில் இருந்து பஸ் ஒன்று நேற்று திரும்பிக்கொண்டிருந்தது.
அந்த பஸ் ஜெய்சல்மீர்-சேலக் சாலையில் சென்றபோது மேலே தாழ்வாக சென்ற ஒரு மின்கம்பி பஸ் மீது உரசியது. அதனால், பஸ் பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது.
அதில் மின் அதிர்ச்சிக்கு உள்ளான 2 சகோதரர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.