முகக் கவசங்களை அணிவது குறித்த தடை நீக்கம் பாரிய தவறு என ஒன்றாரியோ மாகாண எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் முகக் கவசம் அணிதல் குறித்த சுகாதார வழிகாட்டல்களை நீக்கியது.
இவ்வாறு முகக் கவச பயன்பாட்டை நீக்கியது தவறு எனவும், மீளவும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
ஆறாம் கோவிட் அலை உருவாகியுள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் முகக் கவசம் அணிதலை நீக்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.