ஒன்றாரியோ மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நான்காம் கோவிட் தடுப்பூசிக்காக பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் இவ்வாறு நான்காம் தடுப்பூசிக்காக பதிவு செய்து கொள்ள முடியும்.
முதலாவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப்பட்டு ஐந்து மாதங்களின் பின்னர் இரண்டாம் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பொருத்தமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் மற்றும் பிஏ2 ரக திரிபுகளுக்கு எதிராக இந்த புதிய பூஸ்டர் மாத்திரை தொழிற்படும் என சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியோட் தெரிவித்துள்ளார்.