Home இலங்கை ராஜபக்ச ஒருவர் அத்துருகிரிய அச்சகத்தில் அச்சிடப்பட்ட பணம்

ராஜபக்ச ஒருவர் அத்துருகிரிய அச்சகத்தில் அச்சிடப்பட்ட பணம்

by Jey

5 ஆயிரம் ரூபாய் பணம் அச்சிடும் விடயம் தொடர்பாகராஜபக்சவினர் அத்துருகிரிய பிரதேசத்தில் ஓரிடத்தில் இரகசியமாக 5 ஆயிரம் ரூபாய் நாணய தாள்களை அச்சிட்டு வருவதாக சிறப்பு மருத்துவ நிபுணர் ரணில் ஜயசேன தெரிவித்துள்ளார். சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது பற்றிய தகவலை வெளியிட்ட இளைஞன் ஒருவரை கொலை செய்து தியவன்னா ஆற்றில் மூழ்கடிக்க செய்துள்ளனர். இந்த பணத்தையே தேர்தல்களுக்கு செலவு செய்கின்றனர்.

இந்த பணம் போலியானது என்பதை வங்கிகளால் கூட கண்டுப்பிடிக்க முடியாது. என்னிடம் ஒரு நோயாளி வந்தார், தனக்கு மரணம் பயம் இருப்பதாக கூறினார். காணாமல் போன அவரது நண்பன் தியவன்னா ஓயவில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதற்கான காரணத்தை அந்த நோயாளி கூறினார். அத்துருகியவில் காமனி செனரத்திற்கு சொந்தமான இடம் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நிதியமைச்சர் என்ற வகையில் அவரது கையெழுத்துடன் கூடிய 5 ஆயிரம் ரூபாய் நாணய தாள்கள் அச்சிடப்பட்டு இரவு 12 மணிக்கும் முன் வெளியில் கொண்டு செல்லப்படுவதை நோயாளியின் நண்பன், பார்த்து அதனை வெளியில் கூறியுள்ளார்.

குறித்த இடத்தில் காமினி செனரத்தின் மைத்துனரது அச்சகம் உள்ளதை நான் பின்னர் அறிந்துக்கொண்டேன். இந்த விடயம் தொடர்பாக நேரில் பார்த்த என்னிடம் வந்த நோயாளியின் நண்பன் அவர்களின் அறைக்கு திரும்பவில்லையாம், வீட்டிற்கும் செல்லவில்லையாம், அலைபேசியில் தொடர்புக்கொண்டால், அதனையும் நண்பன் எடுக்கவில்லையாம்.

இதன் பின்னர் தியவன்னா ஓயாவில் சடலம் கிடைத்துள்ளதுடன் என்னிடம் வந்த நோயாளி சென்று சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார். இதனால், தன்னையும் கொன்று விடுவார்கள் என்ற அச்சம் இவருக்கும் ஏற்பட்டுள்ளது.

என்னிடம் இந்த தகவலை வழங்கிய நோயாளியை தலைமறைவாக இருக்குமாறும் வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்ணுக்கு மருந்து கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதால், அடுத்த வாரம் வாருங்கள் எனக் கூறி நோயாளியை அனுப்பி வைத்தேன்.

அவர் தற்போது வரை திரும்பி வரவில்லை. காமினி செனரத்திற்கு சொந்தமான இடத்தில் 5 ஆயிரம் ரூபாய் பணம் அச்சிடப்படுவதை வெளியில் கூறியதன் காரணமாகவே இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த பணம் அச்சிடும் விடயம் தொடர்பாக 2014 ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபராக இருந்த இலங்ககோனிடம் முறைப்பாடு செய்தேன். இது பற்றி தேடி அறிவதாக பொலிஸ் மா அதிபர் கூறினார்.

இரண்டு வாரங்களின் பின்னர் நான் பொலிஸ் மா அதிபரை தொடர்புக்கொண்டேன். தமக்கு கூட அந்த இடத்திற்கு செல்ல அனுமதியில்லை என பொலிஸ் மா அதிபர் என்னிடம் தெரிவித்தார்.

இவை பற்றி பேசி பிரயோசனமில்லை எனவும் கூறினார். நான் இதனை வெளியில் கூறாத போதிலும் நீணடகாலமாக இது தொடர்பில் மன உளைச்சலில் இருந்தேன். ராஜபக்ச ஒருவர் அத்துருகிரிய அச்சகத்தில் அச்சிடப்பட்ட பணம் ஒரு பில்லியன் ரூபாய், காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து இருக்கலாம் என நான் சந்தேகிக்கின்றேன்.

பியகமவில் உள்ள தோமஸ் டிலாரோ நிறுவனம் இலங்கை ரூபாய்களை அச்சிடும் நிறுவனம், எனினும் அந்த நிறுவனத்திற்கு வெளியில் 5 ஆயிரம் ரூபாய் நாணய தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவை போலி நாணயத் தாள்கள் அல்ல அசல் ரூபாய் நாணயத்தாள்களை இவர்கள் வெளியில் அச்சிட்டுள்ளனர்.

அதனை சாதாரண மனிதனோ, வங்கிகளோ அடையாளம் காண முடியாது. இது இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலரும், அன்றைய ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளும் இணைந்து செய்த வேலை. அப்போது அஜித் நிவாட் கப்ராலே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார்.

நாங்கள் புறக்கோட்டையில் சென்று டொலர்களை கொள்வனவு செய்தோம் என அண்மையில் பசில் ராஜபக்ச கூறியிருந்தார். அச்சிடப்பட்ட பணத்தில் டொலர்களை கொள்வனவு செய்திருக்கலாம். நல்லாட்சி காலத்தில் ராஜபக்சவினர் பணத்தை கொள்ளையிட்டனர் என்பதை அப்போது இலஞ்ச ஆணைக்குழுவில் பணியாற்றிய தில்ருக்சி விக்ரமசிங்க கண்டுப்பிடித்தார்.

அந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரின் பெயரும் இருந்ததன் காரணமாகவே தில்ருக்சியை விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கினர். இது தொடர்பாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோரிடம்

related posts