உக்ரேய்னுக்க 500 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்குவதற்கு கனேடிய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சமர்ப்பித்த 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ உதவியாக 500 மில்லியன் டொலர்களையும் ஏனைய பொருளாதார உதவிகளும் உக்ரேய்னுக்கு வழங்கப்படும் என ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.
உக்ரேய்னில் ரஸ்யா பல்வேறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதியும் அவரது சகாக்களும் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ப்ரீலாண்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.