Home உலகம் கட்டிப்பிடிக்க கூடாது ! எகிறும் பாதிப்பால் சீனா எச்சரிக்கை

கட்டிப்பிடிக்க கூடாது ! எகிறும் பாதிப்பால் சீனா எச்சரிக்கை

by Jey

நம் அண்டை நாடான சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது

மக்கள் நெரிசல் அதிகமுள்ள இந்நகரில் தற்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக சீன சுகாதாரத்துறை அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், ‘வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற உங்கள் ஆசையை சிறிது காலம் ஒத்திப்போடுங்கள்’ என, உத்தரவிட்டது.

ஷாங்காய் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்களும் சில அறிவிப்புகளை வெளியிட்டனர்.அதில், ‘இன்று முதல் வீடுகளில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண வேண்டாம்; அனைவரும் தனித்தனியாக உறங்கவும்; ஒருவருக்கொருவர் கட்டிப் பிடிப்பதையும், முத்தம் கொடுப்பதையும் தவிர்க்கவும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த நாளங்களில் அடைப்புகொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகான பல்வேறு உடல் நலக்குறைவுகள் குறித்து, ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த உமியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், லேசான தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு கூட, ஆறு மாத காலத்திற்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது

.குறிப்பாக, தொற்றில் இருந்து மீள்பவர்களுக்கு மூன்று மாத காலம் வரை கால் ரத்த நாளங்களில் அடைப்பும் ஆறு மாத காலம் வரை நுரையீரலில் ரத்த நாள அடைப்பும், இரண்டு மாதங்கள் வரை ரத்த கசிவும் ஏற்பட வாயப்புள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

related posts