இன்று காலை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில், சென்னை வேர்கள் மற்றும் கிழங்கு திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளன.
இன்று காலை 10:00 முதல், இரவு 7:00 மணி வரை நடைபெறும் திருவிழாவை, தமிழ்நாடு நிலையான மற்றும் முழுமையான வேளாண்மைக்கான கூட்டமைப்பு, ஆர்கானிக் பார்மர்ஸ் மார்க்கெட், பாதுகாப்பான உணவு கூட்டமைப்பு, தக்கர் பாபா வித்யாலயா மற்றும் சஹஜ சம்ருதா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
இன்றும், நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதில், விவசாயிகள் மற்றும் விதை பாதுகாப்பாளர்கள் ஒன்றிணைந்து பல்வேறு பாரம்பரிய நெல், காய்கறி விதைகளையும் கிழங்குகளையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்ளனர்.ஆர்கானிக் உணவுகள், ஆர்கானிக் ஆடைகள், மாடி தோட்ட பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளன.
இந்த கிழங்குகளை வளர்ப்பது மற்றும் உட்கொள்வதன் முக்கியத்துவம், இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய விதைகள் குறித்து நிபுணர்கள் கருத்தரங்கங்களும் நடைபெறும்.
மேலும், பல சமையல் கலைஞர்கள் மற்றும் பெண்கள், இந்த கிழங்கு வகைகளிலிருந்து சுவாரசியமான உணவுப் பொருட்களை சமைக்கும் சமையல் போட்டியும் நடைபெற உள்ளது.பொருட்கள் வாங்க வருவோர், கட்டாயம் பிளாஸ்டிக் அல்லாத துணிப்பைகளோ, பாத்திரங்களோ கொண்டு வர வேண்டும் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.