சென்னை மாநகராட்சியில், 2016 ம் ஆண்டுக்கு பின் மாநகராட்சி ரிப்பன் மாளிகை கவுன்சில் வளாகத்தில், ‘மாநகராட்சி பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயதாஸ் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் 64 அறிவிப்புகள் வெளியிடப்பட்ன.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.770.02 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
*பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.
*உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.86 கோடி செலவில் இணையதள இணைப்பு வழங்கப்படும்.
*கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த ரூ.4.62 கோடி
* ரூ.3.5 கோடி செலவில் 3 டயாலிசிஸ் மையங்கள்
*அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.
* தனியார் பங்களிப்புடன் 1000 பேருந்து நிழற்குடைகள்
* மாணவி பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகளில் ரூ. 5.47 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள்
*மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ரூ.6.91 கோடியில் தற்காப்பு பயிற்சிகள்
*சொத்து வரியை பொது மக்கள் எளிதாக செலுத்த கியூஆர் கோடுஅறிமுகம் செய்யப்படும்
*10 சதவீதம் கூடுதலாக உள் மற்றும் புற நோயாளிகளுக்கு மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்க நடவடிக்கை
*கடந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக 11,539 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.
*உலக வங்கி நிதியின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும் நடப்பு நிதியாண்டுக்குள் முடிக்கப்படும்.
*2ம் கட்டமாக 70 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
*கவுன்சிலருக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்படும்.
* வீடற்றோருக்கான ரூ.2.40 கோடி மதிப்பில் 3 புதிய காப்பகங்கள்
* ரூ.80 லட்சம் மதிப்பில் 2 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள்
* மனநலம் குன்றி சாலையில் இருக்கும் நபர்களை மீட்க ஒருங்கிணைந்த திட்டம்
* ரூ.7.15 கோடியில் பேட்டரி வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்படும்.
*40.80 கி.மீ., நீளத்திற்கு ரூ.18467 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.
*மறுசுழற்சி செய்ய இயலாத எரியக்கூடிய 16,500 டன் உலர் கழிவுகள் எரிகலன் மூலம் அழிக்கப்படும்.
*6,500 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.2.90 மதிப்பில் கொள்முதல்
*சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் பயனுள்ளதாக உள்ளதால், தன்னார்வலர்களின் மூலம் மேலும் பல பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம்
* மாண்டிசோரி கல்விமுறை பிற மழைலையர் வகுப்புகளிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
*மாநகராட்சி பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஸ்’ பயிற்சி அளிக்கப்படும்
*ரூ.7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் திட்டம்
மாநகராட்சி கூடியதும் சொத்து வரி உயர்வு குறித்து பேச அதிமுக கவுன்சிலர்கள் அனுமதி கேட்டனர். ஆனால், மேயர் பிரியா அதற்கு அனுமதி தரவில்லை. இதனையடுத்து, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்வை கண்டித்து அவர்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.