Home கனடா கனடாவில் இளம் தலைமுறையினர் வீடு கொள்வனவு செய்வதில் வீழ்ச்சி

கனடாவில் இளம் தலைமுறையினர் வீடு கொள்வனவு செய்வதில் வீழ்ச்சி

by Jey

கனடாவில் உள்ள இளைய குடும்பங்கள் வீடு வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.

கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

பெருந்தொற்று ஆரம்பமான காலம் தொடக்கம் முதல் தடவையாக இளைய தலைமுறையினரின் செல்வம் குறைவடைந்துள்ளதனை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் முக்கிய வருமானம் ஈட்டுபவர் 35 வயதிற்குட்பட்ட இளைய வயதினரின் சராசரி சொத்து மதிப்பு 1.4 சதவிகிதம் குறைந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தங்கள் குடும்பத்தில் அதிக வருமானம் ஈட்டும் 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தங்கள் செல்வத்தை சராசரியாக 0.8 சதவீதம் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மிகக் குறைந்த செல்வந்த குடும்பங்கள் தங்களது சராசரி நிகர மதிப்பை வேகமாக அதிகரித்து வருகின்றனர்.

related posts