ரஸ்யா திட்டமிட்ட அடிப்படையில் பொதுமக்களை இலக்கு வைப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உக்ரேய்னில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்கு கனடா உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திட்டமிட்ட அடிப்படையில் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத் வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
புச்சா போன்ற நகரங்களிலிருந்து கிடைக்கப் பெறும் புகைப்படங்கள் மிகவும் வேதனை அளிக்கக் கூடிய வகையிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில் நிலையங்கள், மகப்பேற்று வைத்தியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் என பல்வேறு சிவிலியன் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே புட்டினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடர வேண்டுமென கனடா கோருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.