தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல் 15ம் திகதி துவங்கி, ஜூன் 15ம் திகதி வரை, 60 நாள்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம், வரும் 15ம் திகதி துவங்குகிறது.தினமும், 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது
வரும் 15ம்திகதி முதல் மீன்பிடி தடை காலம் துவங்க உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 2,000 விசைப் படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், மீன்பிடி தடை காலத்திற்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று, அதிகாலை முதலே காசிமேடில் ஏராளமான மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர்.மீன்கள் வரத்து குறைந்திருந்தாலும், பலரும் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.
சென்ற வாரத்தை விட, இந்த வாரம் மீன்களின் விலை, 100 ரூபாய் வரை உயர்ந்தே காணப்பட்டது. எனினும், விற்பனையில் எவ்வித சுணக்கமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:வரும் வாரம் முதல், மீன்பிடி தடை காலம் துவங்க உள்ளதால், மீன்களின் வரத்து மிக குறைவாக இருக்கும்.
அடுத்த வாரம் முதல், நினைத்தாலும் கடல் மீன்களை சாப்பிட முடியாது என்பதால், விலை உயர்வை பற்றி கவலைப்படாமல், மக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.நேற்றைய மீன் விலை நிலவரம்மீன் விலை கிலோ ரூபாயில் வஞ்சிரம் 1000 பாறை 300இறால் 400 சங்கரா 450 வவ்வால் 900 நெத்திலி 400 கடமா 450தும்பிலி 200 நண்டு 400.