Home கனடா றொரன்டோவில் வீடற்ற 216 பேர் உயிரிழந்துள்ளனர்

றொரன்டோவில் வீடற்ற 216 பேர் உயிரிழந்துள்ளனர்

by Jey

றொரன்டோவில் கடந்த ஆண்டு வீடு அற்றவர்கள் 216 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

றொரன்டோ பொது சுகாதாரத் திணைக்களம் (TPH) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிபரத் தகவல்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வீடற்ற மக்கள் சராசரியாக ஒரு வாரத்திற்கு 4.2 இறப்புகள் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.

2020 இல் இருந்து 2021 இல் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

2021 இல் 55 சதவீத மரணங்கள் மிதமிஞ்சிய அளவில் போதைப்பொருள் பயன்படுத்தியதனால் ஏற்பட்டுள்ளன.

இதய நோய், விபத்துக்கள், நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்கள், தாழ்வெப்பநிலை, கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய், உறுப்பு செயலிழப்பு, தற்கொலை மற்றும் புற்றுநோய் போன்ற ஏதுக்களினாலும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இறந்த 216 பேரில் 132 பேர் வீடற்ற தங்குமிடங்களில் வசிப்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts