Home கனடா மானிடோபாவில் பாரிய பனிப்புயல் ஏற்படும் அபாயம்

மானிடோபாவில் பாரிய பனிப்புயல் ஏற்படும் அபாயம்

by Jey

மானிடோபாவில் பாரியளவிலான பனிப்புயல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் மூன்று நாட்கள் இந்தப் பனிப்புயல் நீடிக்கும் என கனேடிய வானிலை அவதான மையம் எச்சரிக்க விடுத்துள்ளது.

சுமார் 30 முதல் 50 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிப்புயல் மணிக்கு 70 முதல் 90 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும், பனிப்புயல் நிலவும் போது வாகனங்களில் செல்வோரினால் வீதியை பார்க்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில தசாப்தங்களில் ஏற்படவுள்ள மிக மோசமான பனிப்புயல் இதுவென எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

related posts