அண்மையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், உணவுப் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் போது ஏற்பட்ட டொலர் நெருக்கடி காரணமாக இவ்வவாறு 367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதற்கமைய அப்பிள், பட்டர், பேரீச்சம்பழம், ஒரஞ், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர், ஓட்ஸ், சொக்லேட், கோர்ன்ப்பிளேக்ஸ் மற்றும் பாஸ்தா ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகளுக்குள் தண்ணீர் போத்தல்கள், பியர், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள், வாசனை திரவியங்கள், அழகுசாதன பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் ஆகியவைகளும் உள்ளடங்கும்.