றொரன்டோவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் அடிப்படையில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்காப்ரோ மற்றும் நோர்த் யோர்க் பகுதிகளில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறவில்லை எனவும் இது எழுமாறாக இடம்பெற்ற தாக்குதல்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்காப்ரோவில் நபர் ஒருவர், அருகாமையில் இருந்த ஒருவர் மீது கோடரியினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
குறித்த நபர் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 31 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, யோர்க்டேல் ரயில் சுரங்கப் பாதையில் வைத்து பெண் ஒருவர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியினால் தாக்கியுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களுடனும் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக றொரன்டோ பொலிஸ் பிரதானி ஜேம்ஸ் ராமர் தெரிவித்துள்ளார்.