ஒன்ராறியோவில் எரிவாயு விலை அடுத்த இரண்டு நாட்களில் லிட்டருக்கு 11 சதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனேடிய எரிசக்தி அமைப்பின் தலைவரான Dan McTeague இது பற்றி அறிவித்துள்ளார்.
எரிவாயு விலைகள் வியாழன் அன்று லிட்டருக்கு 6 சதங்கள் உயர்ந்து லிட்டருக்கு 1.68 டொலர்களாக இருக்கும் எனவும் வெள்ளியன்று ஐந்து சதவிகிதம் அதிகரித்து லிட்டருக்கு 1.73 டொலர்களாகக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் 1.80 டொலர் என்ற அளவிற்கு உயரும் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.