கனேடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் முதல் தடவையாக இவ்வாறு அதிகளவு வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதல் பணவீக்க நிலைமைகள் ஏற்படக் கூடும் என்ற எதிர்வுகூறல்களுக்கு மத்தியில் இவ்வாறு வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
உக்ரேய்ன் யுத்தம் காரணமாக எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந:துள்ளது என மத்திய வங்கியின் ஆளுனர் டிஃப் மாக்லெம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் விலை அதிகரிப்பு போக்கு பற்றி கரிசனை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதத்தை புதன்கிழமை அரை சதவீதம் அதிகரித்து ஒரு சதவீதமாக உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.